சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 1

சென்னை வீரர்கள் யாரும் இல்லை… இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரானது கொரோனாவின் தாக்கம் காரணமாக துபாயில் வைத்து நடத்தப்பட உள்ளது.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 2

ஐ.பி.எல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்பொழுதே சமூக வலைதளங்களில் ஐ.பி.எல் தொடர் குறித்தே விவாதித்து வருகிறது.

அந்த வகையில், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

5. கே.எல் ராகுல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

இந்த தொடரின் மூலம் கேப்டன் அவதாரம் எடுத்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கே.எல் ராகுல் கடந்த தொடரை போலவே இந்த தொடரிலும் அடித்து நொறுக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 3

4 – சுப்மன் கில் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓபனராக களம் இறங்கும் ராபின் உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் வரிசையில் இளம் வீரரான சுப்மான் கில்லும் வாய்ப்பு இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளரானமெக்கல்லமும் அணியின் பெரிய பலமாக சுப்மான் கில் கூறியுள்ளார். சுப்மான் கில் ஓபனாரக களம் இறங்கும் பட்சத்தில் எதிரணிக்கு கடுமையான போட்டியாளராகவும், அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 4
Photo by Saikat Das /SPORTZPICS for BCCI

3 – ஆரோன் பின்ச் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ள ஆரோன் பின்ச் தான் இந்த தொடரின் நாயகனாக இருப்பார் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணிக்கு ஆரோன் பின்சின் வருகை புதிய உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 5

2 – விராட் கோஹ்லி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

உலகின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோஹ்லி இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக அவர் கிரிக்கெட் விளையாடததால் அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் தன்னை நிருப்பித்து கொள்ள ஆக்ரோஷமாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 6

1 – டேவிட் வார்னர் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

சமகால கிரிக்கெட்டின் அதிரடி நாயகனான டேவிட் வார்னர் இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் டேவிட் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான ஆரஞ்சு நிற தொப்பியும் டேவிட் வார்னருக்காக தான் இருக்கும்.

சென்னை வீரர்கள் யாரும் இல்லை... இந்த தொடரில் அடித்து துவம்சம் செய்ய காத்துள்ள டாப் 5 வீரர்கள் !! 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *