இந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா? வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் இந்த வேலைக்கு சரிவருவாரா? வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நியூசிலாந்து அணியை சேர்ந்த மைக் ஹஸன் என்பவர் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா? வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்! 2

இதனால் வருகிற 13வது ஐபிஎல் சீசனுக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு எவ்வித பயிற்சியாளர் பொறுப்பும் ஏற்காமல் இருந்தார்.

அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளராக அதன் நிர்வாகம் நியமித்தது. இதற்கு இந்தியாவில் பல வரவேற்புகள் வந்தாலும் அந்த அணிக்கு அவர் சரியாக இருப்பாரா? என பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா? வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்! 3
India head coach Anil Kumble before the ICC Champions Trophy, semi-final match at Edgbaston, Birmingham. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பிரட் லீ கூறுகையில், “மிகச் சிறந்த வீரர்களை அணியில் கொண்டிருக்கையில் அதற்கு சிறப்பான பயிற்சியாளர்கள் இருந்தால் மட்டுமே அந்த அணி வெற்றியை நோக்கி செல்ல முடியும். அப்படி ஒரு தருணத்தில் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டது மிகவும் உதவிகரமாக இருக்கும். அவரது அனுபவம் மற்றும் திட்டமிடல் ஆகியவை பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்க போகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா? வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்! 4

பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கே தடுமாறி வரும் பஞ்சாப் அணிக்கு கும்ப்ளே கிடைத்திருப்பது ஒரு பொக்கிஷம் என நான் கருதுகிறேன். அவரது அனுபவமும் அணியில் இருக்கும் திறமையான வீரர்களும் இணைந்து பல வெற்றிகளை பெற்றுத் தரப் போகிறார்கள்.” என்றார்.

எது எப்படியோ? பிரட் லீ முன்வைத்த கருத்து சரியாக இருக்கிறதா? இல்லையா? என்பதை இந்த ஐபிஎல் சீசன் முடிந்த உடன் நாம் தெரிந்துகொள்வோம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *