பஞ்சாப்பை சமாளிக்குமா சென்னை..? இன்றைய போட்டியில் வெல்லப்போவது இந்த அணி தான்
ஐபிஎல் தொடரின் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே இன்றைய போட்டியில் களம் காணும் என்பதால் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிச்சயம் ஒரு சில மாற்றங்களுடனே இன்றைய போட்டியில் களம் காணும் என தெரிகிறது. அதில் குறிப்பாக மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெய்லுக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெறுவதால் பழைய ஹிஸ்டரி தேவையில்லை. இந்த சீசனில் எப்படி விளையாடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.
இரு அணிகள் இடையேயான பலம், பலவீனம், முந்தைய புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுதும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பஞ்சாப் அணி;
கிரிஸ் கெய்ல், மயன்க் அகர்வால்,கே.எல் ராகுல், மந்தீப் சிங், சர்பராஸ் கான், நிக்கோலஸ் பூரன்,கிருஷ்ணப்பா கவுதம், ஷெல்டன் கார்டல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், முஜிபுர் ரஹ்மான்.
உத்தேச சென்னை அணி;
சேன் வாட்சன், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, தோனி, டூவைன் பிராவோ, ஜடேஜா, கேதர் ஜாதவ், சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர்.