சென்னை அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் கொல்கத்தா அணி இது தான் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட் (-0.479) மோசமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டியது அவசியம ஆகும். ஒரு ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிடும்.

சென்னை அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் கொல்கத்தா அணி இது தான் !! 2

கொல்கத்தா அணியில் சுப்மான்கில், நிதிஷ்ரானா, இயன் மார்கன், சுனில்நரேன், பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, கும்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணி இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரையில், ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஆண்ட்ரியூ ரசல் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் கொல்கத்தா அணி இது தான் !! 3

அதே போல் கம்லேஷ் நாகர்கோட்டிக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன் (கேப்டன்), சுனில் நரைன், ஆண்ட்ரியூ ரசல், லோகி பெர்குசன், கம்லேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *