இப்போ என் பேட்டிங் நெனச்சா.. எனக்கே பயமா இருக்கு; ஐபிஎல் கேப்டன் கொடுத்த ஷாக்! 1

எனது பேட்டிங் முன்பைப் போல இல்லை என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல்.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கத்தில் இருந்து இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. அதன் பிறகு தற்போது வரை பிளே-ஆப் சுற்றுக்கு செல்லவே திணறி வருகின்றன.

இப்போ என் பேட்டிங் நெனச்சா.. எனக்கே பயமா இருக்கு; ஐபிஎல் கேப்டன் கொடுத்த ஷாக்! 2

கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக டெல்லி கேப்பிடல் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் வருகிற ஐபிஎல் சீசனில் கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கு இதுவே முதல் கேப்டன் பொறுப்பாகும். இதற்கு முன்னர் எந்தவித போட்டிகளில் இவர் கேப்டனாக இருந்ததில்லை.

அதேபோல் மற்றொரு மாற்றமாக பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு அணில் கும்ப்ளேக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ராகுலின் கேப்டன் பொறுப்பு குறித்து ஏற்கனவே அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இப்போ என் பேட்டிங் நெனச்சா.. எனக்கே பயமா இருக்கு; ஐபிஎல் கேப்டன் கொடுத்த ஷாக்! 3

தற்போது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும், தனது பேட்டிங் நிலைமை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் கே எல் ராகுல். கேஎல் ராகுல் கூறுகையில்,

“கடைசியாக ஃபிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக விளையாடியது. அதன்பிறகு எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. முன்பு இருந்ததைப் போன்று தற்போது நிலைமை சரியாக இல்லை. முறையான பயிற்சி இல்லாமல் இந்த தொடருக்கு தயாராகி வருகிறோம். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் எவ்வித தயக்கமும் பதட்டமும் இருக்கக் கூடாது. எனக்கு மட்டுமல்ல அணி வீரர்களுக்கும் இப்படித்தான் இருக்கிறது. தலைவனாக இருந்து கொண்டு இந்த விஷயத்தில் பொய் கூறினால் நிச்சயம் அது சரியாகாது. விரைவில் இதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்பதே உண்மை. நிச்சயம் பஞ்சாப் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரசிகர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்று பேட்டியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *