இந்த ஐபிஎல் தொடரில் இவரின் கேப்டன் பொறுப்பு வெறித்தனமா இருந்தது; அது ரோகித், கோஹ்லி இல்லை.. முன்னாள் வீரர் சொன்னது யாரை? 1

இந்த வருட ஐபிஎல் தொடரில் யாருடைய கேப்டன் பொறுப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்து, அதில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. இதற்கு அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதவிருக்கும் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்னும் ஐபிஎல் குறித்த கருத்துக்களையும் அதில் திறம்பட செயல்பட்டால் பல வீரர்களின் செயல்பாடு குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் அணியை சேர்ந்த கேஎல் ராகுல் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், “கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு கொடுக்கும் பொழுது, நான் அவர் செயல்படுவாரா? மாட்டாரா? என தொடர்ந்து யோசனையில் இருந்தேன். துவக்கத்தில் பஞ்சாப் அணி பல தோல்விகளை சந்தித்து வந்த போது அது சரியான முடிவு இல்லை என நினைத்தேன். ஆனால் தொடரின் பிற்பகுதியில் அவர் பந்துவீச்சாளர்களை கையாண்ட விதம் மிகவும் திறம்பட அமைந்தது. ரவி பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வின் இருவரையும் அவர் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. அதே நேரம் முகமது சமிக்கு எந்த நேரத்தில் ஓவர் கொடுக்க வேண்டும் என யூகித்து செயல்பட்ட விதம் சிறப்பாக அமைந்தது.

முதல் ஐபிஎல் தொடர் கேப்டன் பொறுப்பு என்பதால் சில தவறுகள் ஏற்புடையது. ஆனால் அடுத்தடுத்த தொடர்களில் அவரது செயல்பாட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.” என்றார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் விளாசி ஆரஞ்சு கேப் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *