ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையேதான்! வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்! 1
Photo by Saikat Das /SPORTZPICS for IPL

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையேதான்! வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!

 

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தற்போது நடக்க இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரக நாடு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது துபாய் ,சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே மொத்தமுள்ள 60 போட்டிகள் நடைபெறும். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் பல்வேறு பணிகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.IPL 2020: Latest Graphic Indicates The Opening Match

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல பிரச்சினைகள் உருவாகி விட்டது. சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறி விட்டார்கள். இந்த தொடரிலும் ஆட மாட்டேன் என்று கூறி விட்டார்கள். அதனை தொடர்ந்து அந்த அணியின் முகாமிற்குள் 13 பேருக்கு இரண்டு வேகப்பந்துவீச்சாளர் உட்பட கொரானா வைரஸ் தொற்றி விட்டது.

அதைத் தொடர்ந்து இன்னும் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை முடிவு செய்யப்படவில்லை 19ஆம் தேதி சனிக்கிழமை ஐபிஎல் தொடர் தொடங்க போகிறது இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது. ஆனால், ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியிடப்படவில்லை நேற்று வெளியிடப்படும் என்று கங்குலி அறிவித்திருந்தார்.

ஆனால் அது நடக்கவில்லை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் அறிவித்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம் அதாவது நடக்கிறதா என்று. இதனை தொடர்ந்து எப்போதும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும்.

தற்போது வெளிநாட்டில் நடக்கப் போகிறது இந்த தொடரின் முதல் போட்டியில் இந்த இரண்டு அணிகளுக்கு உள்ளாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக இதனை ஐபிஎல் நிர்வாகம் விரும்பவில்லை என்று தெரிகிறது.

 

 

தொடர்ந்து இதற்கான அட்டவணையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் சூசகமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு யார் யாருக்கு போட்டி என்று தெரிவித்துள்ளது. இந்த புகைப்படத்தில் 15 நாட்கள்தான் இருக்கிறது என்று தெரிவித்துவிட்டு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்தி ஆகிய இருவரின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே தான் இந்த போட்டி நடக்கப்போவதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *