மும்பையை சமாளிக்குமா சென்னை..? இன்றைய போட்டியில் இந்த அணிக்கு தான் வெற்றி
இன்று மாலை துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் தொடரின் 12 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் இன்று துவங்குகிறது.
துபாயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் மோத உள்ள இன்றைய போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன என்பது குறித்தும் இன்றைய போட்டியில் வெல்ல வாய்ப்பு உள்ள அணி எது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இந்த தொடரில் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரும் பின்னடவைவாக பார்க்கப்பட்டாலும், தோனி என்ற மனிதன் எதையும் சமாளிப்பார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஹர்பஜன் சிங் இடத்தை பியூஸ் சாவ்லா சரி செய்து விடுவார் என்று பலரும் கூறினாலும், சுரேஷ் ரெய்னா இடத்தை சரி செய்ய போகும் வீரர் யார் என்பது இன்னமும் கேள்விக்குறி தான்.
2014 ஐபிஎல் சீசனின் முதல் பாதி தொடர் துபாயில் தான் நடைபெற்றது. அதில் ஐந்து ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி ஐந்திலும் தோல்வியை தழுவியிருந்தது. சென்னை நான்கு போட்டிகளில் வென்றிருந்தது.
ஸ்லோ பிட்ச்சான துபாயில் டாஸ் வெல்வதும் அவசியமாக கருதப்படுகிறது. இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, ஜடேஜா, சான்ட்னர் மற்றும் தமிழக வீரர் சாய் கிஷோர் என சென்னை அணிக்காக சுழற் பந்து வீச்சில் அசத்த ஒரு பெரிய படையே உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரண்டு சாம்பியன் அணிகளுக்குமே 50 : 50 சான்ஸ் தான். வெற்றி தோல்வியை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரு அணிகள் இடையேயான இந்த போட்டி இந்திய நேரப்படி 7.30 மணியளவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.