பஞ்சாப்புடன் மல்லுக்கட்ட காத்திருக்கும் மும்பை அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் கே.கே.ஆர். அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது போட்டியில் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்துவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் கடந்த போட்டிகளில் சிறப்பாகவே விளையாடியதால் யாரையும் நீக்க மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்காது என்றே தெரிகிறது.
துவக்க வீரர்களாக வழக்கம் போல் ரோஹித் சர்மாவும், டிக்காக்குமே களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டிகளில் பெரிதாக விளையாடாத டிகாக் இன்றைய போட்டியிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரை பொறுத்தவரையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷானுக்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஆல் ரவுண்டர்களாக வழக்கம் போல் ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா மற்றும் பொலார்டு ஆகியோருக்கே இடம் கிடைக்கும்.
பந்துவீச்சாளர்கள் பொறுத்தவரையில் மெக்லெங்கன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆகியோருக்கே இடம் கிடைக்கும்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, குவிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொலார்டு, க்ரூணல் பாண்டியா, மெக்லங்கன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.