எண்ட்ரீ கொடுக்கும் மிக மிக முக்கிய வீரர் ; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத் !! 1

எண்ட்ரீ கொடுக்கும் மிக மிக முக்கிய வீரர் ; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

எண்ட்ரீ கொடுக்கும் மிக மிக முக்கிய வீரர் ; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத் !! 2

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. அப்துல் சமத் நீக்கப்பட்டு விஜய் சங்கர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் மூன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் எண்ட்ரீ கொடுக்க உள்ளார். அதே போல் யசஸ்வி ஜெய்ஸ்வால் மஹிபால் லம்ரோர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ராபின் உத்தப்பா மற்றும் ரியான் ப்ராக் ஆகியோர் இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ஜாஸ் பட்லர், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் ப்ராக், ராகுல் திவாடியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட், கார்த்திக் தியாகி.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோ, மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ப்ரியம் கார்க், அபிசேக் சர்மா, ரசீத் கான், சந்தீப் சர்மா, கலீல் அஹமத், நடராஜன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *