அம்பத்தி ராயூடு நீக்கம்; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 1

அம்பத்தி ராயூடு நீக்கம்; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அம்பத்தி ராயூடு நீக்கம்; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 2

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. அம்பத்தி ராயூடுவிற்கு பதிலாக இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில், அந்த அணியின் முக்கிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், ரியான் ப்ராக் போன்ற புது வீரர்கள் இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அம்பத்தி ராயூடு நீக்கம்; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 3

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

யசஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), டேவிட் மில்லர், ரியான் ப்ராக், ஸ்ரேயஸ் கோபால், டாம் கர்ரான், ராகுல் த்ரிபாதி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனாட்கட்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

முரளி விஜய், சேன் வாட்சன், டூபிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், தோனி , கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி நிகிடி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *