ஆண்ட்ரியூ ரசல் இல்லை; முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !! 1

ஆண்ட்ரியூ ரசல் இல்லை; முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆண்ட்ரியூ ரசல் இல்லை; முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !! 2

இன்றைய போட்டிக்கான இரு அணிகளும் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளுமே கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளதால் அதே வீரர்களை வைத்தே இன்றைய போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன் (கேப்டன்), சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், லோகி பெர்குசன், கம்லேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர், கேப்டன்), மந்தீப் சிங், கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரண், கிளன் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிரிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், முகமது சமி, அர்ஸ்தீப் சிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *