வாழ்வா சாவா போட்டி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதராபாத் !! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து அபிசேக் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ப்ரியம் கர்க் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாழ்வா சாவா போட்டி; முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதராபாத் !! 2

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார், ஜெயந்த் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போல் பும்ராஹ் மற்றும் டிரண்ட் பவுல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு பட்டின்சன் மற்றும் தாவல் குல்கர்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), டிகாக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, க்ரூணல் பாண்டியா, கீரன் பொலார்ட், நாதன் கவுட்டர் நைல், ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், தாவல் குல்கர்னே.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர் (கேப்டன்), சாஹா (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரசீத் கான், சபாஷ் நதீம் , சந்தீப் சர்மா, நடராஜன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *