முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 1

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

அனுபவ வீரர்கள் அதிகமாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இளம் வீரர்கள் அதிகமாக உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 2

துவக்க வீரர்கள் ( சேன் வாட்சன், ஜெகதீஷன் )

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக வழக்கம் போல சேன் வாட்சனுக்கே வாய்ப்பு கிடைக்கும். அதே வேளையில் தொடர்ந்து சொதப்பி வரும் முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் ஜெகதீசனுக்கு சென்னை அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வரும் ஜெகதீசனுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 3

மிடில் ஆர்டர் ( டூபிளசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், தோனி கேதர் ஜாதவ்)

மூன்றாவது இடத்தில் வழக்கம் போல டூபிளசிஸே களமிறங்குவார். கடந்த போட்டிகளை போலவே இன்றைய போட்டியிலும் டூபிளசிஸ் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 4

அம்பத்தி ராயூடு இன்றைய போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு இல்லை என சென்னை அணியின் சி.இ.ஓவே அறிவித்துள்ளதால் இன்றைய போட்டியிலும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியை போன்று இல்லாமல் இன்றைய போட்டியிலாவது கெய்க்வாட் தனது பங்களிப்பை செய்து கொடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 5

ஐந்தாவது இடத்தில் வழக்கம் போல் தோனியே களமிறங்குவார் அல்லது போட்டியின் தன்மைக்கு ஏற்ப கேதர் ஜாதவை ஐந்து இடத்தில் களமிறக்குவார். தோனி இந்த போட்டியிலாவது தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் ஒரே விருப்பமாக உள்ளது.

ஆல் ரவுண்டர்கள் (சாம் கர்ரான், ரவீந்திர ஜடேஜா, பிராவோ)

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் கடந்த போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரானுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சாம் கர்ரான் தொடர்ந்து பங்களிப்பை சரியாக செய்து வந்தாலும் ஜடேஜாவோ தொடர்ந்து சொதப்பியே வருகிறார். இன்றைய போட்டியிலாவது ஜடேஜா தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும்.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 6

அதே போல் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத டூவைன் பிராவோவை இன்றைய போட்டியில் எதிர்பார்க்கலாம் என சென்னை அணி வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. டூவைன் பிராவோவிற்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் லுங்கி நிகிடி அணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிகிறது.

பந்துவீச்சாளர்க்ள் ( பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர்)

பந்துவீச்சாளர்கள் வரிசையில் பியூஸ் சாவ்லா மற்றும் தீபக் சாஹருக்கே இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பியூஸ் சாவ்லா கடந்த போட்டியை போன்று ரன்களை வாரி வழங்காமல் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது சென்னை அணி வெற்றி பெற கைகொடுக்கும்.

முரளி விஜய் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *