இளம் வீரர் அதிரடி நீக்கம்; இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணி இது தான்
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதுகின்றன.
முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ள இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்கள் (நரைன், சுப்மன் கில்)
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக இன்றைய போட்டியிலும் சுப்மன் கில் மற்றும் சுனில் நரைனுமே களமிறங்குவார்கள் என தெரிகிறது. கடந்த போட்டியில் மிக மோசமாக செயல்பட்ட இந்த ஜோடி இந்த போட்டியிலாவது தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது கொல்கத்தா அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மிடில் ஆர்டர் ( நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் , இயான் மோர்கன், ரின்கு சிங் )
கொல்கத்தா அணியின் மூன்றாவது வீரராக வழக்கம் போல நிதிஷ் ராணாவே விளையாடுவார். அதே போல் நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக்கும், ஐந்தாவது இடத்தில் இயான் மோர்கனுக்குமே இடம் கிடைக்கும் என தெரிகிறது.
அதே போல் கடந்த போட்டியில் சொதப்பிய நிகில் நிக்கிக்கு பதிலாக இன்றைய போட்டியில் ரின்கு சிங்கிற்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல் ரவுண்டர்கள் ( ஆண்ட்ரியூ ரசல், பேட் கம்மின்ஸ் )
கடந்த போட்டியில் பந்துவீச்சில் ஓரளவிற்கு செயல்பட்ட ஆண்ட்ரியூ ரசல், பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. ஆண்ட்ரியூ ரசல் இன்றைய போட்டியிலாவது தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
கொல்கத்தா அணியால் 16.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடந்த போட்டியில் பந்துவீச்சில் மிக மோசமாக செயல்பட்டு ரன்களை வாரி வழங்கினார். இன்றைய போட்டியிலாவது கம்மின்ஸ் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
பந்துவீச்சாளர்கள் (குல்தீப் யாதவ், சிவம் மாவி)
சுனில் நரைனை போலவே கொல்கத்தா அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட குல்தீப் யாதவ் வழக்கம் போல் இன்றைய போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார் என்றே தெரிகிறது.
அதே போல் கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய சிவம் மாவி இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமே.