பஞ்சாப்பை பந்தாட காத்திருக்கும் மும்பை அணி இது தான் !! 1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

மும்பை அணி 6 வெற்றி 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெற்று ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

பஞ்சாப்பை பந்தாட காத்திருக்கும் மும்பை அணி இது தான் !! 2

பஞ்சாப் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய 5 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆதிக்கத்தை பஞ்சாப் அணி தடுத்து நிறுத்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 14-ல், பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன.

பஞ்சாப்பை பந்தாட காத்திருக்கும் மும்பை அணி இது தான் !! 3

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அதே வீரர்களுடனே இன்றைய போட்டியிலும் மும்பை அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா (கேப்டன்), குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, நாதன் கவுட்டர் நைல், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *