ஐபிஎல் புள்ளி பட்டியல் அறிவிப்பு! அதல பாதாளத்திற்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! ராஜநடை போடும் கிங்ஸ் லெவன்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது பதிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பலத்த ஏற்பாடுகளுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் இந்த தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது வரை 6 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் வெளிவந்துள்ளது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு போட்டி முடிந்தவுடன் முதலிடத்தில் இருந்தது
அதை தொடர்ந்து எதிர்பாராதவிதமாக ஜெயித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டு நாட்கள் முதலிடத்தில் இருந்தது. அதன் பின்னர் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது இப்படி தொடர்ந்து நாளுக்கு நாள் மாறிக்கொண்டே நிலையில் நேற்று 6-வது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இடையே நடைபெற்று முடிந்தது
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அநேகமாக மற்ற அனைத்து அணிகளும் இரண்டு வழிகள்தான் பெற்றிருக்கின்றன. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரன் ரேட் விகிதத்தில் இமாலய இடத்தில் இருக்கிறது. +2.425 என்ற அபாரமான ரன் ரேட் உடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற போகிறது என்றும் இந்த புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படும். ஏனெனில் இரண்டு அணிகள் ஏற்கனவே 2 புள்ளிகளுடன் இருக்கிறது. அப்படி எந்த அணி வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு வந்துவிடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது. ஏனெனில் இரண்டு புள்ளிகள் பெற்று இருந்தாலும் அணியின் ரன் ரேட் விகிதம் மைனஸ்சில் இருக்கிறது.
Team | Position | Matches | Won | Lost | NR | Net RR | Points |
KXIP | 1 | 2 | 1 | 1 | 0 | +2.425 | 2 |
MI | 2 | 2 | 1 | 1 | 0 | +0.993 | 2 |
RR | 3 | 1 | 1 | 0 | 0 | +0.800 | 2 |
DC | 4 | 1 | 1 | 0 | 0 | 0.000 | 2 |
CSK | 5 | 2 | 1 | 1 | 0 | -0.145 | 2 |
RCB | 6 | 2 | 1 | 1 | 0 | -2.175 | 2 |
SRH | 7 | 1 | 0 | 1 | 0 | -0.500 | 0 |
KKR | 8 | 1 | 0 | 1 | 0 | -2.450 | 0 |