சதி செய்து ரோஹித் சர்மாவை நீக்கியதா இந்திய அணி..? சேவாக் காட்டம் !! 1

இந்திய அணியில் அதிரடி நாயகனாக ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார், இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிகளை குவித்து தந்துள்ளார்.

ஹிட்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரோகித் சர்மா இடது காலில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணி பிசிசிஐ தேர்வு செய்யப்படவில்லை. இதுபற்றி கூறிய பிசிசிஐ ரோகித் சர்மாவின் காயம் மிகத்தீவிரமாக உள்ளதாக அளிக்கப்பட்ட மெடிக்கல் ரிப்போர்ட்யின் அடிப்படையில் தான் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமித்தனர். இது பற்றி பல சர்ச்சையான வாதங்கள் வந்த நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக அவர் களம் இறங்கியது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு விராட் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ ஆகிய அனைவரும் தான் காரணம் என்று ரசிகர்களும், பல கிரிக்கெட் ஜாம்பவான் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

சதி செய்து ரோஹித் சர்மாவை நீக்கியதா இந்திய அணி..? சேவாக் காட்டம் !! 2

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் இது பற்றி தன் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு நடக்கும் இந்த அநீதியான செயல் எனக்கு 2011 வேர்ல்டு கப் போட்டியில் நடந்தது போலவே உள்ளது அன்று எனது தோள்பட்டை காயம் காரணமாக நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். உண்மையில் எனக்கு தோள்பட்டையில் காயம் இருந்தது ஆனால் அது 2010 டிசம்பருக்குள் சரி செய்யப்பட்டது. இருந்தபோதும் பிசிசிஐ எடுத்த முடிவின் காரணமாக நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன்.

அதே போன்று தான் இன்று ரோஹித் சர்மாவுக்கும் நடக்கிறது. ரோகித் சர்மா ஃபிட்டாஹட் தான் உள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ள நிலையில் பிசிசிஐ இவ்வாறு முடிவு எடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் மும்பை இந்தியன் அணிக்காக ஃபைனலில் ரோகித் சர்மா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வாறு அவர் அப்போட்டியில் களமிறங்கினால்அது மிகப் பெரும் சர்ச்சையை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *