ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !! 1

ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள்

இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான பெங்களூர் அணியும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகத்துடன் அடங்கிய டீசர்ட்டை அணிந்து தமிழர்கள் பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சமூக வலைதளங்களில் வைரலான இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !! 2

தமிழர்கள் பற்ற வைத்த தீப்பொறி ராஜஸ்தான், கர்நாடகா என நாடு முழுவதும் பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்தி திணிப்பிற்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறது.

மற்ற மாநிலங்களை விட ஒரே படி மேலே சென்று கண்ணில் படும் இந்தி எழுத்துக்களை எல்லாம் கர்நாடகா மக்கள் கருப்பு மை கொண்டு அழித்து வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல பெங்களூர் அணியினர் தங்களுடைய “ஆந்த்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர். காரணம் அதில் அதிகளவு இந்தி கலப்பு உள்ளது.

இதற்கு கடுமையான எதிர்வினைகளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆற்றி வருகின்றனர். அதில் பலர் “ஒட்டுமொத்த கர்நாடகாவும் இந்தி திணிப்பை எதிர்த்து வரும் சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை முன்னிறுத்தும் ஓர் அணி இந்தியில் பாடலை வெளியிட்டு இருக்கிறது. இது அவமானம்” என தெரிவித்து இருக்கின்றனர். சிலர் “ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு பதிலாக இந்தி என மாற்றிக்கொள்ளுங்கள்” என தெரிவித்தனர்.

ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !! 3

சில ரசிகர்கள் இதற்கு ஆதரவும் தெரிவிக்கின்றனர் “ஆர்சிபி அணி ஒன்றும் மாநிலத்தை முன்னிறுத்தும் அணியில்லை, அது வெறும் ஒரு பிரான்சைஸ் மட்டுமே இதுபோன்ற எதிர்ப்பு முட்டாள்தனமானது” என தெரிவித்துள்ளனர். ஆனால் பல ரசிகர்கள் இந்தியில் இருக்கும் பாட்டை கன்னடத்தில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பின் காரணமாக கன்னட மொழியில் உருவான பாடலை வெளியிட்டது ஆர்சிபி அணி.

ஒவ்வொரு தொடரிலும் தங்களது மோசமான ஆட்டத்தின் காரணமாக ரசிகர்களிடம் திட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூர் அணி, இம்முறை ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே திட்டு வாங்க துவங்கியுள்ளது கூடுதல் தகவல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *