சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் சொதப்பி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு இன்று மறுக்கப்படாது என்றே தெரிகிறது.

கடந்த போட்டியில் இடம்பெறாத ஜெயதேவ் உனாட்கட்டிற்கு இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.