சாம் கர்ரான் அதிரடி நீக்கம்..? ரீ எண்ட்ரீ கொடுக்கும் மிக முக்கிய வீரர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் இல்லாத அளவிற்கு தோனி இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி மாற்றத்துடனே அணியை மாற்றியமைத்து வருகிறார். இருந்த போதிலும் அது சென்னை அணிக்கு பலன் அளிக்கவில்லை. எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இனி வரும் போட்டிகளுக்கான சென்னை அணியில் அதிரடி மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் இம்ரான் தாஹிருக்கு இடம் கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய போட்டியில் ஒரு வேளை இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில், சாம் கர்ரான் அணியில் தனது இடத்தை இழக்க நேரிடும் என்றே தெரிகிறது. டூபிளசிஸ், பிராவோ மற்றும் சேன் வாட்சனை அணியில் இருந்து நீக்க வாய்ப்பே கிடையாது என்பதால் சாம் கர்ரானை சென்னை அணி கழட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்த இம்ரான் தாஹிர் இன்றைய போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுத்தால் அது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
சேன் வாட்சன், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, ஜெகதீஷன், தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான்/ இம்ரான் தாஹிர், டூவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், கரன் சர்மா, தீபக் சாஹர்.