அணியில் அதிரடி மாற்றங்கள்; இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணி இது தான்
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதுகின்றன.
முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ள இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்கள் ( டேவிட் வார்னர், பாரிஸ்டோ )
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்றைய போட்டியிலும் வழக்கம் போல டேவிட் வார்னரும், பாரிஸ்டோவுமே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அதிரடி ஆட்டக்காரர்களான இருவரும் இன்றைய போட்டியிலும் தங்களது அதிரடியை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு அசுர பலத்தை கொடுக்கும்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ( மணிஷ் பாண்டே, அப்துல் சமத்)
ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் வழக்கம் போல மணிஷ் பாண்டேவும், கடந்த போட்டியில் சொதப்பிய ப்ரியம் கார்கிற்கு பதிலாக அப்துல் சமத்திற்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
இளம் வீரரான அப்துல் சமத் 11 டி.20 போட்டிகளில் விளையாடி 240 ரன்கள் குவித்துள்ளார். இவரின் ஸ்டைரக் ரேட் 136.36 ஆகும்.
ஆல் ரவுண்டர்கள் ( விஜய் சங்கர், முகமது நபி )
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வழக்கம் போல் விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை பயன்படுத்தி கொண்டு விஜய் சங்கர் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடந்த போட்டியில் காயமடைந்த மிட்செல் மார்ஸிற்கு பதிலாக இன்றைய போட்டியில் முகமது நபிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான முகமது நபி வழக்கம் போல தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.
பந்துவீச்சாளர்கள் ( அபிஷேக் சர்மா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன் )
பந்துவீச்சாளர்கள் வரிசையில் அபிஷேக் சர்மா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா மற்றும் நடராஜன் ஆகியோருக்கே இன்றைய போட்டிக்கான ஹைதிராபாத் அணியிலும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு யூனிட் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.