தனது பொறுப்பான ஆட்டத்திற்கு ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் தான் மிக முக்கிய காரணம் என ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான விர்திமான் சஹா ஓபனாக தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் விருத்திமான் சஹாதான்.
சற்று நெருக்கடியான நிலையில் விளையாடிக்கொண்டிருந்த ஹைதராபாத் அணிக்கு கைகொடுக்கும் வகையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் விருத்திமான் சாஹா களமிறக்கப்பட்டார் .விருத்திமான் சஹா டெல்லிக்கு எதிராக களம் இறங்கி தனது பார்மை நிறுபித்தார் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தினார்.

டெல்லி அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சாளரான ஆர்ச்சர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல், அண்ரிச் நர்சே போன்ற உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை சமாளித்து டெல்லி அணியை தனது தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் துவம்சம் செய்தார்.
இதனால் ஹைதராபாத் அணி 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கடைசியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் 58 ரன்கள் எடுத்து பிளெ ஆஃப் செல்லும் வாய்ப்பினை உறுதி செய்தார்.
இதுபற்றி கூறிய சஹா எனது அணி எனக்கு மிகுந்த ஒத்துழைப்பை தந்தது மேலும் எனது அணியின் அனுபவம் வாய்ந்த கேப்டன் வார்னர் எனக்கு ஊக்கம் தந்து என்னுடைய போக்குக்கு தகுந்தார்போல் விளையாடுமாறு கூறினார். மேலும் எனது அணி தலைமையும் என்னை எனது ஸ்டைலில் பேட்டிங் செய்ய ஒத்துழைத்தது. இதன் காரணமாகவே என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

பந்து வீச்சாளர்களை சமாளித்து பவுண்டரிகளை எப்படி அடிக்கலாம் என்று எனது அணியின் கேப்டன் எனக்கு சொல்லித் தந்தார் மேலும் அவர் எந்த பந்தை எவ்வாறு கையாள்வது என்றும் அறிவுறுத்தினார்.இந்த நெருக்கடியான நிலையிலும் எவ்வாறு ரன்ளை குவிப்பது என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்..இதன் காரணமாகவே என்னால் மிகச் சிறப்பாக செயல்பட முடிகிறது இதற்கு முக்கிய காரணம் டேவிட் வார்னர் மற்றும் எனது அணி நிர்வாகமும் ஆகும் என்று கூறினார்.