மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல் !! 1

மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல்

உலகளவில் மிகவும் பிரபலமான டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது. இந்த 10 ஆண்டுகளின் கடைசி தொடரான 2019-ல் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல் !! 2
Kolkata: KKR bowler Piyush Chawla reacts after dimissed Kings XI Punjab batsman Glenn Maxwell during IPL Match at Eden Garden in Kolkata on Wednesday.
PTI Photo by Swapan Mahapatra(PTI5_4_2016_000312B)

ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல் மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31-ந்தேதிதான் முடிவடைகிறது.

மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல் !! 3

முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *