முக்கிய வீரருக்கே அணியில் இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி !! 1

முக்கிய வீரருக்கே அணியில் இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தெர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

முக்கிய வீரருக்கே அணியில் இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி !! 2

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ், மணிஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களுடன், மிட்செல் மார்ஸ், நடராஜன், ப்ரியம் கார்க் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வீரருக்கே அணியில் இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி !! 3

கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியில், பார்த்தீவ் பட்டேல் மற்றும் கிரிஸ் மோரிஸுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பிலிப்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார். அதே போல் துவக்க வீரர்களாக ஆரோன் பின்சும், இளம் வீரர் தேவ்தத் பட்டிக்கல்லும் களமிறங்க உள்ளனர். இதுதவிர வழக்கமான அனைத்து சீனியர் வீரர்களும் இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;

ஆரோன் பின்ச், தேவ்டட் பட்டிக்கல், விராட் கோஹ்லி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜாஸ் பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாசிங்டன் சுந்தர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, டேல் ஸ்டைன், யுஸ்வேந்திர சாஹல்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், மிட்செல் மார்ஸ், ப்ரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *