செப்டம்பர் மாதம் துவங்குகிறது ஐ.பி.எல் தொடர்..? புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 1

செப்டம்பர் மாதம் துவங்குகிறது ஐ.பி.எல் தொடர்..? புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

கொரோனாவின் கோர தாண்டவத்தால் காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் டி.20 தொடர் செம்பம்பர் மாத இறுதியில் துவங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் துவங்க இருந்த ஐ.பி.எல் டி.20 தொடர் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக காலவரையரையின்றி ஒத்து வைக்கப்பட்டது.

பல்லாயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என பி.சி.சி.ஐ., முழு முனைப்பில் உள்ளது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ரசிகர்கள் ஐ.பி.எல் தொடர் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செப்டம்பர் மாதம் துவங்குகிறது ஐ.பி.எல் தொடர்..? புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 2

அக்டோபர் 18ல் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அக்டோபர் – நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஐபிஎல் எப்போது நடத்தப்படும் என்ற திடமான முடிவை பிசிசிஐ-யால் எடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், போட்டிகளை காண ரசிகர்களை அனுமதிப்பது, இப்போதைய சூழலில் சாத்தியமல்ல.

இந்நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் இந்த ஆண்டே ஐபிஎல்லை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ரசிகர்கள் இல்லாமல் நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஐபிஎல் இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்படும் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் மாதம் துவங்குகிறது ஐ.பி.எல் தொடர்..? புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 3

இந்நிலையில், செப்டமர் 26ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி ஐபிஎல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் செப்டம்பர் இறுதியில் தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை நடத்தப்படலாம்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம். டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில் இந்த தேதிகளில் ஐபிஎல் நடத்தப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *