ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பு இந்த நாட்டில்தான் நடக்கப்போகிறது! வெளியான செய்தி !
பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் இந்த வருடம் நடக்குமா இல்லையா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் வீரர்களிடமும் தற்போது வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. முன்னதாக மார்ச் 29ம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் வேறு வழியின்றி கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டது .ஏப்ரல் 15 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது ஆனால் வேறு வழியின்றி அதன் பின்னர் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் இதன் காரணமாக பெரிய சிக்கல் வந்துவிடும் மேலும் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
அதேபோல் ரசிகர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வேண்டும். இதன் காரணமாக எப்படியாவது இந்த வருடம் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூடி முடிவெடுத்து உள்ளார்.

ஏற்கனவே இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தொடரை தங்கள் நாட்டில் நடத்தித் தருகிறோம் என்று கேட்டிருந்தார் இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டும் பாதி ஐபிஎல் தொடர்கள் அங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.