ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைக்கப் போகும் கேப்டன் விராட் கோலி!!
என்னதான் இந்திய அணிக்காக ஒரு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து இருந்தாலும், ஐபிஎல் அணி என்று வந்துவிட்டால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பெரிதாக ஈடுபடுவதில்லை.இதற்கு விமர்சகர்கள் பல காரணங்களை கூறி வருகிறார்கள். இந்திய அணியில் இருக்கும் போது கோலி எடுப்பதுதான் முடிவு அவர் சொல்வது தான் அனைத்தும் நடக்கும்.

ஆனால் பெங்களூரு அணியை எடுத்துக்கொண்டால் அணி நிர்வாகம் பயிற்சியாளர் என அனைவரும் கோலியின் முடிவில் தலையிடுவார்கள் அவர்கள் சொல்லும் அணியை வைத்து தான் விராட் கோலி விளையாட முடியும் அந்த அளவிற்கு தான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் விராட் கோலி ஒரு மிகப்பெரிய வெற்றியை பெங்களூரு அணிக்கு பெற்றுத்தர முடியவில்லை என்று விமர்சனம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் இன்று 21 -ஆம் தேதி விராட் கோலியின் தலைமை வகிக்கும் பெங்களூரு அணி மற்றும் டேவிட் வார்னர் தலைமை வகிக்கும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் விராட் கோலி வெற்றி பெற்றுவிட்டால் 50 வெற்றிகள் பெற்று நான்காவது கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள கேப்டன்களின் பட்டியல்
தோனி 101 வெற்றிகள்.
கௌதம் கம்பீர் 71 வெற்றிகள்.
ரோஹித் சர்மா 61 வெற்றிகள்.
விராட்கோலி 49 வெற்றிகள்.
விராட் கோலி இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் 50 வெற்றிகளை பெற்று இந்த ஜாம்பவான்கள் நிறைந்த பட்டியலில் இடம் பெறுவார்.