இந்த வருஷமும் கப்பு எங்களுக்கு தான்! மார்தட்டும் ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் அசுரத்தனமாக ஆடி வருகிறது. அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். அணியில் எந்த வீரர் இல்லை என்றாலும், எந்த வீரர் சரியாக ஆடவில்லை என்றாலும் அடுத்தடுத்து வரும் வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடி அணியை தூக்கி நிறுத்துகிறார்கள். இப்படித்தான் ரோகித் சர்மா துவக்க வீரராக ஆடாத காலத்தில் இஷான் கிஷான் துவக்க வீரராக வந்து சில அரை சதங்கள் அடித்து அந்த இடத்தை நிரப்பினார்

அதே வீரரை கடைநிலையில் இறங்கி விட்டாலும் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்து வருகிறார். இந்த வருடம் பாண்டியா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் என்று தான் கூற வேண்டும். டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 14 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அணியை 200 ரன்கள் அடிக்க வைத்தார்
இப்படித்தான் தொடர்ந்து இந்த அணி பயணித்துக் கொண்டிருக்கிறது. பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை வெற்றி பெற விடாமல் செய்கின்றனர். இந்நிலையில் இந்த முறையும் கோப்பை எங்களுக்குதான் என்று மார்தட்டி பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா. அவர் கூறுகையில்…

எங்களது அணியில் யாராவது ஒருவர் நன்றாக ஆடாவிட்டால் மற்றவர்கள் அவர்களை தூக்கி நிறுத்துகிறார்கள். அணியும் தூக்கி நிறுத்தப்படுகிறது. இதில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கின்றன.ர் இந்த அணி மிகவும் அற்புதமாக அணியாக மாறிவிட்டது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது இறுதிப்போட்டியில் நன்றாக விளையாடினால் இந்த முறையும் கோப்பை எங்களுக்குதான் என்று தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.