பறிக்கப்படும் விராட் கோஹ்லியின் கேப்டன் பதவி..? 1

பறிக்கப்படும் விராட் கோஹ்லியின் கேப்டன் பதவி..?

பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஆரோன் பின்சிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்கள் உலா வர துவங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் கிங்காக திகழ்ந்தாலும், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து சொதப்பியே வருகிறார்.

 

விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒவ்வொரு தொடரில் படுதோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போது விமர்ச்சனத்திற்கு ஆளாகி வரும் விராட் கோஹ்லி, இந்த தொடரிலும் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

பறிக்கப்படும் விராட் கோஹ்லியின் கேப்டன் பதவி..? 2

விராட் கோஹ்லிக்கு ஆதரவாக சிலரும், விராட் கோஹ்லிக்கு எதிராக சிலரும் தினம் தினம் எதாவது கருத்து கூறி கொண்டே இருக்கும் நிலையில், விராட் கோஹ்லியை பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரு தகவலும் சமூக வலைதளங்களில் உலா வர துவங்கியுள்ளது.

பந்துவீச்சாளர்களை சரியாக சரியான நேரத்தில் பயன்படுத்துவது இல்லை, தெளிவான முடிவுகள் எடுப்பது இல்லை, ப்ளேயிங் லெவனை முறையாக தேர்வு செய்வது இல்லை போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சீசனில் கோலி தனது தலைமைப் பொறுப்பை ஃபின்ச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய வீரரான ஃபின்ச், தேசிய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். பொறுப்புகளை ஃபின்ச்சிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் கோலி அழுத்தமின்றி விளையாட முடியும் என்று பேசப்படுகிறது.

பறிக்கப்படும் விராட் கோஹ்லியின் கேப்டன் பதவி..? 3

பேட்டிங்கில் உலகின் தலைசிறந்த ஒருவனாக வலம் வந்தாலும், தலைமைத்துவத்தில் கோலி பல நேரங்களில் சறுக்கல்களையே சந்தித்துள்ளார். நடப்பு சீசனிலும் ஆர்.சி.பி பெரும் ஏமாற்றத்தை சந்திக்கும் முன் கோலி தலைமைப் பொறுப்பை துறந்திட வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *