ஜேம்ஸ் நீசம்
இவரை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக மும்பை அணி வாங்கியது. இவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு எதிராக நடந்த போட்டியில் இவர் களமிறங்கினார்.
2 ஓவர்கள் மட்டும் பந்துவீசி 26 ரன்கள் கொடுத்தார், விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பேட்டிங்கில் முதல் பந்திலேயே அவுட்டானார். மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் போல்ட் போலவே இவரும் பங்கேற்க மாட்டார். எனினும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்டு இருக்கையில் இவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கிடைப்பது என்பது குறைவு.