2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இவர்கள்தான்!! 1

கடந்தாண்டு துபாய் அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதனால் அந்த அணி புள்ளி பட்டியலில் கூட இறுதி இடத்தைப் பிடித்து பரிதாபமாக இருந்தது.

இன்னிலையில் 2021 கானா ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், டாம்கரன்,வருன் அருண் உள்ளிட்ட 8 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அந்த அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியை சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இவர்கள்தான்!! 2

அதன்பின் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கு தேவைப்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதில் குறிப்பாக கிறிஸ் மோரிஸ் குல்திப் யாதவ் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இந்த மூன்று நபர்களாக தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1. ஜோஃப்ரா ஆர்ச்சர்.

2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இவர்கள்தான்!! 3

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக திகழும் இங்கிலாந்து நாட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பந்து வீசுவது வல்லவர் இவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டி அதிகமான விக்கெட்களை வீழ்த்தினார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. கிறிஸ் மோரிஸ்

2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இவர்கள்தான்!! 4

சமீபமாக நடந்துமுடிந்த 2021 ஐபிஎல் போ எழுத்தில் 16.25 கோடி ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட சவுத் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களிடையே அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக திகழ்கிறார். ஆல்ரவுண்டர் ஆன இவர் கடந்தாண்டு பெங்களூர் அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார் இருந்தபோதும் இந்த ஆண்டு இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்களை வீழ்த்தினார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.ஸ்ரெயஸ் கோபால்

2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் இவர்கள்தான்!! 5

கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளரான ஸ்ரெயஸ் கோபால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இவர் 14 போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுகிறது, இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் இவர் 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *