இந்த ஐபிஎல் தொடரில் மிரட்ட போகும் துவக்க வீரர்கள் இவர்கள் தான்; ஆகாஷ் சோப்ரா உறுதி !! 1

நடைபெற காத்திருக்கிற 2021 கான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா அவர்கள்தான் சிறந்த வீரர்களாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் 10 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. 

இந்த ஐபிஎல் தொடரில் மிரட்ட போகும் துவக்க வீரர்கள் இவர்கள் தான்; ஆகாஷ் சோப்ரா உறுதி !! 2

இந்நிலையில் இந்த போட்டியில் யார் சிறந்த வீரர் எந்த அணி வெல்லும் போன்ற கருத்துக்கள் கிரிக்கெட் வல்லுநர்களைக்கிடையே பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நிச்சயமாக இந்த வருடத்திற்கான சிறந்த துவக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சவுத்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் இவர்கள் இருவர்தான் இருப்பார்கள். ஒருவேளை ரிங்டன் டிகாக் இருக்கு பதில் இஷன் கிஷன் களமிறக்கப்பட்டால், அது இன்னும் சிறந்த துவக்க ஜோடியாக அமையும் என்று தெரிவித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் மிரட்ட போகும் துவக்க வீரர்கள் இவர்கள் தான்; ஆகாஷ் சோப்ரா உறுதி !! 3

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் மிக சிறப்பாக செயல்பட்டார் இவர் 14 போட்டிகளில் பங்கேற்று 517 ரன்கள் அடித்தார்.அதேபோன்று சவுத்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் 16 போட்டிகளில் பங்கேற்று 503 ரன்களை எடுத்து அசத்தி இருந்தார்.

மேலும் கடந்த வருடம் காயத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹித் சர்மா 12 போட்டிகளில் பங்கேற்று 332 ரன்கள் அடித்திருந்தார்.

மேலும் வருகிற முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையே சென்னை மைதானத்தில் நடக்கவுள்ளது, இதற்கான பயிற்சிகளில் இரு அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *