சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 1
Bengaluru: Chennai Super Kings' Ravindra Jadeja celebrates fall of AB de Villiers' wicket during the 39th match of IPL 2019 between Royal Challengers Bangalore and Chennai Super Kings at M.Chinnaswamy Stadium in Bengaluru, on April 21, 2019. (Photo: IANS)

2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.


ஐபிஎல் வரலாற்றில் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக செயல்படவில்லை. சென்னை அணியின் இந்த செயல்பாட்டால் ரசிகர்கள் பெரும் கவலை இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 2

இந்நிலையில் 2021 காண ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து பல அணிகளும் தனக்கு தேவைப்படும் அணி வீரர்களை தேர்வு செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் அணியிலிருந்து கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன் ஹர்பஜன் சிங்க், முரளிவிஜய், பியுஸ் சாவ்லா ஆகியவர் விடுவிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் அணிக்கு முக்கியமாக தேவைப்படும் 3 வீரர்களை சென்னை அணி தேர்வு செய்ய உள்ளது.


1 ஆரோன் பின்ச்.
ஆஸ்திரேலியா அணி நட்சத்திர வீரரான ஆரோன் பின்ச் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. இருந்தபோதும் இவரது திறமை மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவருக்கு இருக்கும் அனுபவம் இவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 3

சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்த ஆண்டுக்கான துவக்க வீரராக ஆரோன் பின்ச் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2 பிரதீப் சங்வான்
2018 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பிரதீப் சங்வான் 39 ஐபிஎல் போட்டியில் பங்கேற்று 35 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்களை வீழ்த்தி 8 முக்கியமான விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 4

சமீபமாக நடைபெற்ற முஷ்தாக் அலி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் நான்கு போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்களை கைப்பற்றினார் இடது கை பந்து வீச்சாளரான பிரதீப் 2021 சென்னை அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


3 ஜலாஜ் சாக்சேன
34 வயதான கேரள மாநிலத்தை சேர்ந்த சாக்சேன சென்னை அணிக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் மற்றும் பியுஸ் சாவ்லா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் சென்னை அணிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் மூன்று முக்கிய வீரர்கள் !! 5

சமீப காலமாக நடைபெற்ற சையது முஷ்தாக் அலி போட்டியில் இவர் 5 போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக சக்சேனா மிகச்சிறந்த தேர்வாக இருப்பார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *