விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட டைட்டில் பட்டத்தை வென்றதில்லை இதன் காரணமாக சமூக வலைதளங்களிலும் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடம் இந்த அணி கேலிக்குரிய அணியாக மாறிவிட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் ஆடம் ஜாம்பா, சாஹால் போன்ற வீரர்களை உள்ளடக்கியது. இருந்தபோதும் 2021 ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான மொயின் அலி மற்றும் ஆரோன் பின்சை அணியிலிருந்து நீக்கியது.

எனவே அந்த அணிக்கு மற்றுமொரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது டாப் ஆர்டர்களில் மிகவும் பலமாக இருக்கும் பெங்களூரு அணி மிடில் ஆர்டர்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் சிறப்பாக செயல்படவில்லை.
இதுபற்றி கிரிக்கெட் வல்லுனரான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நிச்சயம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சேர்ந்த கர்நாடக பேட்ஸ்மேனான கருண் நாயரை தனது அணியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்யும்.
வ்லது கை பேட்ஸ்மேனான கருன் நாயர் 73 ஐபிஎல் போட்டியில் பங்கேற்று1480 ரன்களை எடுத்துள்ளார்,இவருடைய ஸ்ட்ரைக் ரேட்126.36
அனுபவம் வாய்ந்த வீரரான கருண் நாயர் பெங்களூர் அணிக்கு தேர்வாகும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பெங்களூர் அணி மிக பலமாக மாறும் இதனால் அந்த அணி மிகச் சிறந்த அணியாக திகழ்வதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்