021 கான ஐபிஎல் போட்டி மே மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தனது வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் தனக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொள்ள திட்டம் தீட்டிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ளது.
ஐபிஎல் போட்டி இளம் வீரர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த இடமாகவே திகழ்கிறது.இந்நிலையில் சமீபமாக நடந்து முடிந்த முஸ்தாக் அலி போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் விளையாட உள்ளனர்.
1.கார்த்திக் ககடே.

நடந்து முடிந்த முஸ்தாக் அலி போட்டியில் 25 வயதாகும் கார்த்திக் மிக சிறப்பாக செயல்பட்டார்.பரோடா அணியின் ஆல்ரவுண்டர் கார்திக் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மேலும் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஏதேனும் ஒரு அணிக்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.முகமது அசாருதீன்.
26 வயதாகும் முகமது அசாருதீன் சையது முஷ்தாக் அலி போட்டியில் கேரளா அணிக்காக விளையாடினார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், அந்த போட்டியில் இவர் 54 பந்துகளுக்கு 137 ரன்கள் அடித்தார் அதில் 11 சிக்ஸ்களும் அடங்கும்.

மேலும் மிகக் குறைவான பந்தில் சதம் கடந்த வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்,இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இவர் நிச்சயம் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3.எம் சித்தார்த்
இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த் 2019இல் தமிழ்நாடு அணிக்கு தேர்வாகினார். இவர் 5 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், முஷ்டாக் அலி போட்டியின் இறுதிப்போட்டியில் பரோடா அணிக்கு எதிராக 4 விக்கெட்களை வீழ்த்தி தமிழக அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார்.

இவர் கொல்கத்தா அணிக்காக 20 லட்சம் ஏலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் இந்நிலையில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், இந்த ஆண்டு ஏதேனும் ஒரு அணிக்கு நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது