2021 ஐபிஎல் தொடரில் ஆறாவது போட்டி இன்று சென்னை மைதானத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாக இன்றைய போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர் தேவ்தாத் படிக்கள் களம் இறங்க உள்ளார்.
கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப் படுத்தப் பட்டிருந்த தேவ்தாத் படிக்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவரால் பங்கு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக பெங்களூரு அணி மிகவும் பலவீனமாக மாறும் என்று கருதப்பட்ட நிலையில் மிக சிறப்பாக விளையாடி 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை முதல் போட்டியிலேயே பெங்களூர் அணி வீழ்த்தியது. இந்நிலையில் இவரின் வருகை பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் உற்சாகத்தை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

படிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் மேலும் இவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணியை பலமுறை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டி மற்றும் முஷ்தாக் அலி போட்டியில் மிக சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார்.
இந்நிலை கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த தேவ்தாத் படிக்கள் மிகவும் நலமாக இருப்பதாக மேலும் விளையாடுவதற்கு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் சமீபமாக அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணியின் டைரக்டர் மைக் தெரிவித்ததாவது தற்பொழுது இவர் சிறப்பாக உள்ளார் மேலும் விளையாடுவதற்காக காத்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் பெங்களூர் அணிக்கும், மேலும் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழும் என்று எதிர்பார்த்து, முதல் போட்டியிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் நடக்கவிருக்கும் இந்த போட்டி பார்ப்பதற்கே மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.