எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் வயதை கணக்கில் கொண்டு அந்த வீரருக்கு ஓய்வு அளிக்கப்படும். இருந்தாலும் சில வீரர்கள் 40 வயதுக்கு மேலும் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்துள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் தொடரில் 30 வயதிற்கு மேல் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டால் அது மிகப் பெரும் ஆச்சரியமாக கருதப்படும் ஏனென்றால் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை உடற்தகுதி என்பது இறுதிவரை மெயின்டெயின் செய்து கொண்டே வர வேண்டும்.
இந்நிலையில் 40 வயதிற்கு மேலும் ஐபிஎல் தொடரில் இன்னும் சில வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அபாரமாக விளையாடி வருகின்றனர் அப்பேர்ப்பட்ட 4 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்
எம்எஸ் தோனி
இந்திய அணியின் முன்னாள் வெற்றிகர கேப்டன் எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.மேலும் ஐபிஎல் தொடரில் அதிகமான போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் முன்னிலை வகிக்கும் எம்எஸ் தோனி பலமுறை சிறப்பாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முறை டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் 40 வயதுக்கு மேலாகியும் தற்போது வரை சென்னை அணியின் கேப்டானாகவே திகழ்ந்து வருகிறார்.இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை ஆனால் இவர் சென்னை அணியை மிகச் சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
