2021 கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மிக கோலாகலமாக நடைபெற்று கொண்டுள்ளது.இந்நிலையில் 8 அணிகளும் மிக சிறப்பாக தங்களது வீரர்களை இந்தத் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெல்வார்.?, எந்த அணி தோல்வியைத் தழுவும்.? எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்.? எந்த வீரர் அதிகமான விக்கெட்களை எடுப்பார்.?எந்த அணிகள் எல்லாம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற கருத்துக்கள் கிரிக்கெட் வல்லுனர்களுக்கு இடையே பேசுபொருளாக உள்ளது, மேலும் ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது கருத்துக்களை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அவரிடம் ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு சாதனையை நீங்கள் முறியடிக்க ஆசைப்படுகிறீர்கள்.? என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் ஒரு போட்டியில் அதிகமான சிக்சர்களை அடிக்க வேண்டும் என்று பதிலளித்தார்.
இவர் இதற்கு முன் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு போட்டியில் அதிகமாக 7 சிக்சர்களை அடித்து அசத்தினார் மேலும் அந்த போட்டியில் 73 பந்துகளில் 89 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலேயே அதிகமான சாதனைகளை படைத்து இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் யூனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ் கெய்ல் தான், இவர் 131 போட்டிகளில் 349 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரே போட்டியில் அதிகமான சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 2013 ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ்க்கு எதிரான போட்டியில் 17 சிக்சர்களை அடித்து அசத்தினார்.மேலும் பெங்களூர் அணிக்காக அப்போது விளையாடிய இவர் அந்தப் போட்டியில் 175 ரன்கள் அடித்து விக்கெட்டை இழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிறிஸ் கெயில் அடித்த அந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முறியடிக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.