14வது ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதாக வெற்றி பெற்று விட்டது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்த முடியவில்லை

டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஓரளவிற்கு நன்றாக ஆடிய சென்னை அணி பந்து வீச்சில் கடுமையாக சொதப்பியது அந்த அணியால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. 138 ரன்னில் தான் முதல் விக்கெட் விழுந்தது. அவனை தொடர்ந்து டெல்லி அணி வெற்றி பெறும் போது வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தது. போட்டி முடிந்த பின்னர் பந்துவீச்சாளர்கள் தான் சரியாக பந்து வீசவில்லை என்று தோனி கூறியிருந்தார்.

கிட்டத்தட்ட ஆறு பந்துவீச்சாளர்கள் பந்து வீசியும் சென்னை அணியின் பந்துவீச்சு இன்னும் செட் ஆகவில்லை. குறிப்பாக இரண்டு ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை எப்போதும் சென்னை அணி தனது ஆடும் லெவனில் வைத்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் இல்லை. இதற்காக லுங்கி என்ஜிடி, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் இந்த வருட ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால் முதல் போட்டியில் ஒருவர் கூட வழங்கப்படவில்லை இரண்டாவது போட்டியிலாவது இருவரில் ஒருவர் விளையாட வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Stephen Fleming confirms Lungi Ngidi and Jason Behrendorff won't be available for #CSK's next game @sportstarweb @TheHinduSports
— Amol Karhadkar (@karhacter) April 10, 2021
ஆனால் இரண்டாவது போட்டியிலும் இருவரும் விளையாட முடியாது என்று தெரியவந்திருக்கிறது. இதனை அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருக்கிறார் இதன் காரணமாக ஏற்கனவே பந்துவீச்சில் மோசமாக இருக்கும் சென்னை அணி இரண்டாவது போட்டியிலும் சொதப்ப போவதாக அந்த அணியின் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.