மொய்ன் அலிக்கு அணியில் இடம்; தரமான ஆடும் லெவனுடன் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை படை !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

14வது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மொய்ன் அலிக்கு அணியில் இடம்; தரமான ஆடும் லெவனுடன் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை படை !! 2

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொய்ன் அலி அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். அதே போல் டூவைன் பிராவோ, சாம் கர்ரான், டூபிளசிஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர ருத்துராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜடேஜா போன்ற வழக்கமான அனைத்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பாவிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மொய்ன் அலிக்கு அணியில் இடம்; தரமான ஆடும் லெவனுடன் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை படை !! 3

அதே போல் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்திற்கு இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் ரஹானே அணியில் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் கிரிஸ் வோக்ஸ், ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா மற்றும் டாம் கர்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இஷாந்த் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, அஜிக்னியா ரஹானே, ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரன் ஹெய்ட்மர், கிரிஸ் வோக்ஸ், ரவிச்சந்திர அஸ்வின், டாம் கர்ரான், அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

ருத்துராஜ் கெய்க்வா, அம்பத்தி ராயூடு, டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொய்ன் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், டூவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *