அணியில் இடம்பிடித்த அதிரடி ஆட்டக்காரர்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி படை !! 1

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

14வது ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அணியில் இடம்பிடித்த அதிரடி ஆட்டக்காரர்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி படை !! 2

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஸ்ரேயஸ் கோபால் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனாட்கட் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார்.

அணியில் இடம்பிடித்த அதிரடி ஆட்டக்காரர்; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி படை !! 3

அதே போல் இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து சிம்ரன் ஹெய்ட்மர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக காகிஷோ ரபாடா அணியில் இடம்பிடித்துள்ளார். அதே போல் லலித் யாதவ் என்னும் இளம் வீரர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஜாஸ் பட்லர், சிவம் துபே, ரியன் ப்ராக், ராகுல் திவாடியா, கிரிஸ் மோரிஸ், சேட்டன் சக்கரியா, ஜெயதேவ் உனாட்கட், முஸ்தபிசுர் ரஹ்மான்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), அஜிக்னியா ரஹானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிரிஸ் வோக்ஸ், ரவிச்சந்திர அஸ்வின், லலீத் யாதவ் காகிசோ ரபாடா, டாம் கர்ரான், ஆவேஷ் கான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *