சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
14வது ஐபிஎல் சீசனில் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

கடந்த போட்டிகளில் விளையாடாத டெல்லி அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான அக்ஷர் பட்டேல் இன்றைய போட்டிக்கான அணியின் மூலம் எண்ட்ரீ கொடுத்துள்ளார். இதனால் லலீத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே போல் இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ஜெகதீச சுதித் என்னும் வீரர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். இது தவிர அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிசேக் ஷர்மா, கேதர் ஜாதவ், ரசீத் கான், ஜெகதீச சுசித், கலீல் அஹமத், சித்தார்த் கவூல்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சிம்ரன் ஹெய்ட்மர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், காகிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.