சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
கடந்த 9ம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் சீசனில் இதுவரை 7 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரின் 8வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய காட்டயத்தில் உள்ளது.
இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துளனர்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.
துவக்க வீரர்களாக வழக்கம் போல் மாயன்க் அகர்வாலும், கே.எல் ராகுலுமே இடம் பெறுவார்கள் என தெரிகிறது.
அதே போல் மிடில் ஆர்டரில் கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா மற்றும் ஷாருக் கான் ஆகியோருக்கே இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரிலே மெரிடித், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது ஆகியோருக்கே வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
மாயன்க் அகர்வால், கே.எல் ராகுல், கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ரிலே மெர்டித், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், அர்ஸ்தீப் சிங், முகமது ஷமி.