ஹைதராபாத் அணிக்கு அணிக்கு இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
14வது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடியான நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. விர்திமான் சஹா, ஜேசன் ஹோல்டர், சபாஷ் நதீம் மற்றும் நடராஜன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜிபுர் ரஹ்மா மற்றும் கலீல் அஹமத் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. மேக்ரோ ஜென்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
ரோஹித் சர்மா (கேப்டன்), குவிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், டிரண்ட் பவுல்ட்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோ (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத், ரசீத் கான், புவனேஷ்வர் குமார், முஜிபுர் ரஹ்மான், கலீல் அஹமத்.