அடுத்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் இந்த பந்து வீச்சாளர்தான்! மார்க் வாஹ் நம்பிக்கை! 1

ஆஸ்திரேலியன் முந்தைய டெஸ்ட் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நன்றாக அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் 2018ஆம் ஆண்டு பால் டம்பெரிங் சர்ச்சை தொடர்பாக அவர் ஒரு ஆண்டு காலம் கிரிக்கெட் போட்டியிலிருந்து தடை செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கி வருகிறார்.

ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் மாற்றப் போவதாக தெரிய வந்துள்ளது. எனவே மீண்டும் ஒரு புதிய ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர் மத்தியில் எழ ஆரம்பித்து விட்டது. தற்போது அது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாஹ் பேசியுள்ளார்.

He is quite a calm character': Australian speedster Pat Cummins praises  Indian youngster | Hindustan Times

என்னைப் பொருத்தவரையில் பேட் கம்மின்ஸ் சிறந்தவராக இருப்பார்

மார்க் வாஹ் பேசுகையில் நிச்சயமாக அடுத்த கேப்டன் ஆவதற்கு முழு தகுதியும் உடைய இரு வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் மட்டுமே. பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியின் அடிவேராக நின்று விளையாடுவது ஸ்டீவ் ஸ்மித் மட்டும்தான். அதேபோல ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக பந்துவீசி தற்பொழுது நம்பர் ஒன் பெஸ்ட் பவுலர் ஆக பேட் கம்மின்ஸ் வளர்ந்த இருப்பது கவனிக்கத்தக்கது.

எனவே இந்த இரு வீரர்கள் ஒருவரைத்தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் புதிய கேப்டனாக அறிவிக்கும். என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன் ஆக இருப்பார்கள் என்று கேட்டால் அது நிச்சயமாக பேட் கம்மின்ஸ் மட்டுமே. பேட் கம்மின்ஸ் தமிழ் தான் என்னால் நிச்சயமாக ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Pat Cummins take four wickets as Australia take control of third Test  against India | Cricket News | Sky Sports

பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 34 டெஸ்ட் போட்டியில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவரது பௌலிங் அவரேஜ் 21.6 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் அக்கணமே 2.75 ஆகும்.4 விக்கெட் ஹால் 12 முறையும், 5 விக்கெட் ஹால் 5 முறையும் அதே போல 10 விக்கெட் ஹால் ஒருமுறையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி வருகிற நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் தொடங்கி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடர் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *