இனிதான் ஆட்டமே இருக்கு.. களமிறங்கும் மிக முக்கிய வீரர் ; உறுதி செய்த ஜாஹிர் கான் !! 1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான குவிண்டன் டி காக்கும் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் டி.20 தொடர் கடந்த 9ம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், இந்த தொடரின் ஐந்தாவது போட்டியான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இனிதான் ஆட்டமே இருக்கு.. களமிறங்கும் மிக முக்கிய வீரர் ; உறுதி செய்த ஜாஹிர் கான் !! 2

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோலியடைந்துள்ளதால், கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்காக இரு அணிகளும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் ஜாஹிர் கான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிதான் ஆட்டமே இருக்கு.. களமிறங்கும் மிக முக்கிய வீரர் ; உறுதி செய்த ஜாஹிர் கான் !! 3

குவாரண்டைன் காரணமாக பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி ஆட்டக்காரர் குவிண்டன் டி காக், இன்றைய போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஜாஹிர் கான் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இனிதான் ஆட்டமே இருக்கு.. களமிறங்கும் மிக முக்கிய வீரர் ; உறுதி செய்த ஜாஹிர் கான் !! 4

பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் டி.காக்கிற்கு பதிலாக மும்பை அணிக்கு அறிமுக வீரராக களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் லின் மும்பை அணிக்கான தனது முதல் போட்டியிலேயே 40 ரன்கள் குவித்திருந்தாலும், இன்றைய போட்டியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக்/ கிரிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, கீரன் பொலார்டு, மார்கோ ஜென்சன், ராகுல் சாஹர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், டிரண்ட் பவுல்ட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *