ஜடேஜா, தோனி கிடையாது… சென்னை அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்ற வீரர்களை விட சின்ன தல சுரேஷ் ரெய்னா தான் முக்கியமான வீரர் என முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த வருட தொடரில் கடுமையாக சொதப்பியது, முதன்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறமுடியாமல் வெளியேறியது. சென்னை அணி இனி அவ்வளவு தான், அணியை மொத்தமாக மாற்றியமைத்தால் மட்டுமே இனி சென்னை அணியால் வெற்றி பெற முடியும் என கூறப்பட்டது, இதனால் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி நிறைய இளம் வீரர்களை எடுக்கும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொய்ன் அலி போன்ற சீனியர் வீரர்களை கோடி கோடியாய் கொட்டி எடுத்தது.

ஜடேஜா, தோனி கிடையாது… சென்னை அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

ஐபிஎல் ஏலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறந்த இளம் வீரர்களை எடுக்காததால் இந்த முறையும் சென்னை அணி கடுமையாக சொதப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியோ இந்த முறை அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஐந்து போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஜடேஜா, தோனி கிடையாது… சென்னை அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாஸ் காட்டி வருவதற்கு ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ் போன்ற வீரர்கள் தான் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸோ சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா தான் மிக முக்கியமான வீரர் என தெரிவித்துள்ளார்.

ஜடேஜா, தோனி கிடையாது… சென்னை அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

இது குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் பேசுகையில், “பீல்டிங்கில் அனைவரின் கவனமும் ஜடேஜா மீது தான் உள்ளது, ஆனால் சுரேஷ் ரெய்னா தான் மிக முக்கியமானவர். சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா மிக முக்கியமானவர், அவரும் சென்னை அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். மொய்ன் அலியை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்பதற்காக சுரேஷ் ரெய்னாவை நான்காவது இடத்தில் களமிறக்கும் சென்னை அணியின் முடிவு எனக்கும் பிடித்துள்ளது. என்னை பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னாவிற்கு நான்காவது இடம் தான் மிக சரியானது. சுழற்பந்து வீச்சாளர்களையும் சுரேஷ் ரெய்னாவால் ஈசியாக சமாளிக்க முடியும். சுரேஷ் ரெய்னா இல்லாததால் தான் கடந்த வருட தொடரில் சென்னை அணி தடுமாறியது. மிடில் ஆர்டரில் அவரது பங்கு மிக முக்கியமானது, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சுரேஷ் ரெய்னாவால் மிக சிறப்பாக விளையாட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *