இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 14வது சீசன் நேற்று துவங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , பெங்களூர் அணியும் மோதிய நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மாலை 7:30மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இதை சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் என்று டெல்லி கேப்பிடல் அணியை தவிர்த்து மற்ற அணிகளில் ஒவ்வொரு வீரரை தேர்வு செய்துள்ளார்.
இதில் அவர் முதலாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவை தேர்ந்தெடுத்துள்ளார். சென்னை அணி எப்பொழுதும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும் ஆனால் கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா இல்லாததால் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் தனது வாய்ப்பை பறிகொடுத்தது.எம்எஸ் தோனி டுப்லஸ்ஸிஸ் போன்ற வீரர்கள் இருந்தும் முதலாவதாக சுரேஷ் ரெய்னாவை, டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதன் பின் இரண்டாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்துள்ளார் இவர் கடந்த ஐபிஎல் போட்டியில் 17 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வை தேர்வு செய்துள்ளார் இவர் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிக சிறப்பாக செயல்படுவார் என்று குறிப்பிட்ட அவர் 4-வது வீரராக பஞ்சாப் அணியின் நிக்கலஸ் பூரானை தேர்வு செய்துள்ளார்.பூரான் ஒரு மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார் இவரின் உதவியால் பஞ்சாப் கிங்ஸ் அணி பல முறை வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. இவர்களை தவிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டி நடராஜனையும், பெங்களூர் அணியில் தேவ்தாத் படிகளையும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிவாடியா ஆகியவையும் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது