ரிக்கி பாண்டிங் (டெல்லி கேப்பிடல்ஸ்)
2018 ஆம் ஆண்டு டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பிரபல்யமான பயிற்சியாளர் களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனால் 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணி மிகவும் மோசமாக செயல்பட்டது அதற்குப் பின் நடந்த அடுத்தடுத்த தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியிலிருந்து விலகினார் அவருக்கு பதில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாமல் டெல்லி அணி சிரமப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிக்கி பாண்டிங்கின் திறமையான பயிற்சியின் மூலம் டெல்லி கேப்பிடல் அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் வருமானம் 3.5 கோடி ஆகும்.